2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வீரகெட்டிய பிரதேச சபை கட்டிடம் திறப்பு

Super User   / 2013 நவம்பர் 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


50 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீரகெட்டிய பிரதேச சபையின் கட்டிடத் தொகுதி நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டிடத்தினை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்தஅமரவீர, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் சில்வா, பிரதிஅமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வி.கே. இன்திக, பாதுகாப்பு மற்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க மற்றும் வீரகெட்டியபிரதேசசபையின் தலைவர் பியசேன லியனாரச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .