2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பிரார்த்தனை கூடம் உடைப்பு; சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

Super User   / 2014 ஜனவரி 16 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஜி.சுகதபால

ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள இரண்டு பிரார்த்தனை கூடங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு காலி மேலதிக நீதவான் குணரத்ன குமார இன்று உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பின்னரே மேலதிக நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார். அத்துடன் குறித்த தாக்குதல் தொடர்பில் சேகரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு ஊடக நிறுவனங்களுக்கும் மேலதிக நீதவான் உத்திரவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .