2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாணவன் கடலில் மூழ்கி மரணம்

Super User   / 2014 ஜனவரி 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.எம்.இர்பான்

ஹம்பாந்தோட்டை கடலில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவனொருவன் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ரீ.ஏம்.நிப்லான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாடசாலை முடிந்து விளையாடுவதற்காக பீச்பாக்கிற்கு தனது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .