2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

காலி முன்னாள் மேயரை பதவியில் அமர்த்த உத்தரவு

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவிவிலக்கப்பட்ட காலி மாநகர சபையின் முன்னாள் மேயர் மெத்சிறி டி சிலவாவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு தென் மாகாண மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தென்மாகாண முதலமைச்சர் விஜயலால் சில்வா 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மேயர் மெத்சிறி சில்வாவை அப்பதவியிலிருந்து நீக்கினார்.

அந்த வர்த்தமானி அறிவித்தலையே காலி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பி.கே ஹிரிமுரேகம வலுவற்றதாகி தீர்ப்பளித்தார்.

மெத்சிறி சில்வாவை அந்த பதவியிலிந்து விலக்கியதன் பின்னர் பிரதி மேயர் கெலும் செனவிரத்ன மேயராக கடமையாற்றினர்.

 முதலமைச்சரின் கட்டளையை சட்டரீதியற்றதாக்குமாறு கோரி, மெத்சிறி சில்வா வழக்குத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் முதலமைச்சர், முன்னாள் உள்ளுராட்டி மன்ற ஆணையாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .