2025 மே 01, வியாழக்கிழமை

80 ஹெரோய்ன் பக்கெட்டுக்களுடன் பெண் உட்பட இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தரை, ஹித்தெடிய ரஜமகா விகாரைக்கு அருகாமையில் 80 ஹெரோய்ன் பக்கெட்டுக்கள் வைத்திருந்த பெண்ணொருவரையும் ஆணொருவரையும் பஸ்ஸில் வைத்து, நேற்று புதன்கிழமை (19) இரவு 10 .05 மணியளவில் கைது செய்துள்ளதாக மாத்தரை பொலிஸார் தெரிவித்தனர். 

பெண்ணிடமிருந்து 70 ஹெரோய்ன் பக்கெட்டுக்களும் ஆணிடமிருந்து 10 ஹெரோய்ன் பக்கெட்டுக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட பெண், 48 வயதுடைய தெவிநுவர பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்டவர் எனவும் ஆண், 43 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பயணத்துக்காக பஸ்ஸில் காத்திருந்த குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று வியாழக்கிழமை (20) மாத்தரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மாத்தரை பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .