Freelancer / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேதென்ன பொது மயானத்திற்கு அருகிலுள்ள இறப்பர் தோட்டத்தின் காட்டில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கடந்த 07ம் திகதி மீட்கப்பட்டது.
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஹொரண வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் சுமார் 40 - 50 வயதுடைய 05 அடி 08 அங்குலம் உயரமுடையவரென்றும் கழுத்தில் தங்க நிற தர்ம சக்கரம் கறுப்பு நூலில் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் உடலில் மூன்று பச்சை குறிகள் உள்ளதாகவும் இடது கையின் மேல் மணி வடிவிலும்,வலது கை தோளில் S வடிவ பச்சையும் காணப்படுகின்றன.
சடலத்தின் முகம் முற்றிலும் சிதைந்து அழுகிய நிலையிலுள்ளதுடன் அவரது ஆண்குறி வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இந்த சடலம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளறுமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஹொரண பொலிஸ் நிலையம் – 0342261222 அல்லது, பொலிஸ் தலைமையகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு – 0112436161 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
24 minute ago
26 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
3 hours ago
7 hours ago