2024 மே 31, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் நியமன புறக்கணிப்பிற்கு எதிராக தேசிய ஷூறா சபை முறைப்பாடு

Super User   / 2014 ஜனவரி 21 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண ஆசிரியர் நியமனத்தின் போது முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தேசிய ஷூறா சபை இன்று முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஷூறா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2013.12.26ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது தென் மாகாணத்தின் தகுதிபெற்ற பட்டதாரி விண்ணப்பதாரிகளைப் புறக்கணித்து விட்டு மாகாணத்துக்கு வெளியே குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உதவியுடன் வரவழைக்கப்பட்ட 67 பட்டதாரிகளை தென் மாகாண பாடசாலைகளுக்கு நியமித்ததை தேசிய  ஷூறா சபை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளது. 

குறித்த நியமனத்தால் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரி விண்ணப்பதாரிகளுடன் கலந்தாலோசித்துத் தயாரித்த தேசிய ஷூறா சபையின் அறிக்கையின் பரிந்துரைகளின் படி நேற்றும் இன்றும் பாதிக்கப் பட்ட பட்டதாரிகள்  குழுக்களாகவும் தனியாகவும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்துள்ளனர்.

கடந்த 2013.08.16ஆம் திகதி வெளியிடப்பட்ட தென் மாகாண கல்வி அமைச்சின் வர்தமானி அறிவித்தலின் படி பிரதேச முஸ்லிம்கள் இன ஒதுக்களுக்கு உட்பட்படுத்தப்பட்டுள்ளதை பாரிய மனித உரிமை மீறலாகச் சுட்டிக் காட்டி குறித்த வர்தமானி அறிவித்தலின் படி வழங்கப்பட்ட 67 நியமனங்களையும் உடனடியான இரத்தச் செய்வதுடன் 2012.08.28ஆம் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் உடனடியாக நியமனம் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் தேசிய ஷூறா சபையின் மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்தது.

திட்டமிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு மேற்கொள்ளும் செயற்பாட்டில் தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி தாஸிம் தலைமையில் தேசிய ஷூறா சபையின் உறுப்பினர்களான எம்.ஆர்.எம்.நஜா, ஏ.எல்.ஹகீம், வைத்தியர் றியாஸ் காஸிம் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளும் ஈடுபட்டனர்.

குறித்த முறைப்பாட்டில் தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய, தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் தென் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தென் மாகாண முஸ்லிம் பட்டாதாரிகளுக்கு இழைக்கப்பட்ட்ட அநீதியை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் தேசிய ஷூறா சபை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது".

 


You May Also Like

  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Tuesday, 08 July 2014 04:43 AM

    தொடரட்டும் சூறா சபையின் பணிகள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .