Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 04 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி பஸ் நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 14 மற்றும் 11 வயதான இரண்டு சிறுமிகளை, காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் பாதுகாப்பில் கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர்கள் இருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு சிறுமிகளும் சகோதரிகள் எனவும், அவர்கள் கம்புறுபிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி காலை, இந்த சிறுமிகள், பாடசாலை செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் வேறு ஓர் இடத்துக்குச் சென்று உடைகளை மாற்றி, கம்புறுபிட்டியவில் இருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அன்று மாலை, அந்தச் சிறுமிகள் இருவரும் கம்புறுபிட்டிய வந்துள்ள நிலையில், முச்சக்கரவண்டி சாரதியொருவர், வீட்டில் கொண்டு சென்று விடுவதாகக் கூறி, அவர்கள் இருவரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளார்.
பின்னர் அவர், அந்த இரண்டு சிறுமிகளையும் தடுத்து வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அடுத்த நாள், அந்த இரண்டு சிறுமிகளையும் கம்புறுபிட்டிய நகரத்தில் அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்போது அந்த சிறுமிகள், மாத்தறை நோக்கிச் சென்று, அங்கிருந்து காலிக்கு வந்துள்ளதாக, மேலதிக விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
பின்னர் அவர்கள் இருவம், காலி பஸ் நிலையத்தில் இருந்த போது இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
விசாரணைகளுக்குப் பின்னர் குறித்த இரண்டு சிறுமிகளும் மேலதிக விசாரணைக்காக கம்புறுபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
10 minute ago
25 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
43 minute ago
47 minute ago