Freelancer / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 15 வயது சிறுமியை ஸ்கேன் அறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப சிகிச்சையின் பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு தயாராகி படுக்கையில் கிடந்த சிறுமியை மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
வார்டுக்கு அழைத்து வரப்பட்டபோது சிறுமி அழுது கொண்டிருந்தாள். செவிலியர் குறித்த சிறுமியிடம் விசாரித்த போது, ஸ்கேன் அறையில் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.
வார்டுக்கு பொறுப்பான வைத்தியர் வழங்கிய தகவலின் பேரில் வைத்தியசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் நீதித்துறை வைத்திய அதிகாரி டாக்டர் ஜானகி வருஷஹென்னடி நோயாளியை பரிசோதித்து, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.ஆனால் நோயாளியின் புகாரை புறக்கணிக்க முடியாது.
மேலும், காலி பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி சௌதாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
30 minute ago
32 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
3 hours ago
7 hours ago