2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வைத்தியரின் நகை அபகரிப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கராபிட்டிய பொது வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி  ஒன்றை  அபகரித்து சென்ற சம்பவமொன்று  செவ்வாய்க்கிழமை  (17) பதிவாகியுள்ளது.

அபகரிக்கப்பட்ட நகையின் பெறுமதி 140,000 ரூபாய்  என குறிப்பிட்ட  வைத்தியர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்க நகையை அபகரித்து சென்ற நபர் தொடர்பில்  தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .