Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இருந்து, கென்யாவின் நைரோப் நகரத்தின் ஊடாக, கென்ய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 18 பேர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய 20 பேர் திரும்பியனுப்படும் தினம் குறித்து நிச்சயமாக கூற முடியான என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடு திரும்பியவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago