2025 மே 07, புதன்கிழமை

’20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’

Nirosh   / 2020 ஒக்டோபர் 10 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள சபாநயாகர் அலுவலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்திருப்பதாகவும்,  திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அதனை திறந்துப் பார்ப்பதாகவும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X