2025 மே 01, வியாழக்கிழமை

2024 பட்ஜெட் சவாலானது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் திங்கட்கிழமை முதல் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஒக்டோபர் மாதம் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அறியமுடிகிறது.

நவம்பர் மாதத்தில், நிதி, பொருளாதார விவகாரங்கள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்காக மற்றுமொரு சவாலான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வருட நெருக்கடியிலிருந்து நாடு இன்னும் மெதுவாக மீண்டு வருவதாகவும் எனவே 2024 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது எனவும்அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நாட்டை முழுமையாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற்றுவதற்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .