Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.
இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
அதன்மூலம் துளையிடும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கெனவே துளையிட்டு வந்த முதல் ரிக் இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டு இந்த அதிநவீன இயந்திரம் துளையிட ஆரம்பித்துள்ளது. இந்த இயந்திரம், முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது.
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 61 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
1 hours ago