2025 மே 06, செவ்வாய்க்கிழமை

TIKTOK இல் பிரபாகரன் வத்தளையில் இளைஞன் கைது

R.Maheshwary   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

TIKTOK செயலி ஊடாக முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளைப் பதிவிட்ட 25 வயது இளைஞர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்   இந்தசெயலி ஊடாக  LTTE அமைப்பின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் முதலில் முல்லைத்தீவிலும் பின்னர் ஹட்டனிலும் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X