2025 மே 12, திங்கட்கிழமை

அங்குலான விவகாரம்: 14 பேர் பிணையில் விடுதலை

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று(16) ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

09 பெண்கள் உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இன்று(17) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இரவு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த அமித் கருணாரத்ன என்பவரின் கொலைக்கு காரணமாக சந்தேக நபர் கைதுசெய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது கொலைக்கு நீதி கோரியும் பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியிருந்ததுடன், 14 பேரை கைதுசெய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X