Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்குமே இன்று உரித்தாகியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடும் நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,குறைந்த நிறைகொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கின்றன நாடு என்ற சாதனையையும் இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும் 'மனிதாபிமான சுற்றுலா'வின் நான்காம் நாள் விஜயத்தை சூரியவெவ நகரில் நேற்று (29) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
"குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு" என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்ததன் பின்னர் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, சூரியவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப் அவர்களின் சூரியவெவ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம், பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றதாகவும்,ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகள் கணக்கில் எடுக்கப்படாது, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே என்றும் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒர் சொர்க்கமாக மாற்றிவிட்டதாகவும்,மறுபுறம் இருண்ட சொர்க்கமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago