2025 மே 08, வியாழக்கிழமை

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புது டில்லி:

 

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமா னார்.  

பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி டில்லியில் உள்ள இராணுவ மருத்து வமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா்.

அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார்.

முன்னதாக, அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந் தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X