Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 04 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள சீனித் தொழிற்சாலைக்கு சீனா முதலீடு செய்வதாகக் கூறப்படுவதாகவும் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம் என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, " எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்". என தெரிவித்தார்
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago