Editorial / 2020 நவம்பர் 16 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (16) மூவர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.
மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் வீட்டிலிலேயே மரணமடைந்தார். அவர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 10ஐ வசிப்பிடமாகக் கொண்ட 70 வயதான ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை அடுத்து, ஐடிஎச் இல் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மரணமடைந்தார் அவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என அறியமுடிகின்றது.
இதேவேளை, கொழும்பு 13ஐ வசிப்பிடமாகக் கொண்ட 75 வயதான ஆணொருவரும் மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் மரணமடைந்தார். நீரிழிவு நோயை அடுத்தே அவர் மரணித்துள்ளார் என இனங்காணப்பட்டது.
எனினும், பரிசோதனைகளின் பின்னர், அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை இனங்காணப்பட்டது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
51 minute ago
1 hours ago