2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

“இலங்கை மீது கறுப்புப்புள்ளி”

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் வேளையில், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இன்றளவிலும் தொடர்கின்றன என்று இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமூக ஊடகங்களைப் பயன்படுத்திப் போலித்தகவல்களைச் சமூகமயப்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறுத்தப்படவில்லை. குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலப்பகுதியில், இலங்கையில் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்துவதற்குச் சில குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் மீண்டெழுவதை அந்தக் குழுக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் கடத்தல்கள் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் பதிவிடப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கை தனிநபருக்கு இலாபமாக இருக்கலாம். ஆனால், இராஜதந்திர மட்டத்தில் அது நாட்டுக்குத் தாக்கமாகவே அமையும்.

எனவே, ஊடகங்களுக்கு ஒழுக்கக்கோவை இருப்பதுபோல் சமூக ஊடகங்களுக்கும் அவ்வாறான ஒழுக்கக்கோவை அவசியம்” - என்றார். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .