2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இலங்கைத் தலைவர்களை விசாரணைக்குத் தள்ளும் ஐ.நா உயர்ஸ்தானிகர்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறாயின் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மோசமான மீறல்களுக்காக சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இலங்கையின் அரசியல், இராணுவத் தலைவர்களுக்கு ஏற்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை விடுவித்தல், புதிய நிலங்களை கைப்பற்றலை இடைநிறுத்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தல், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்தல், காணாமல் போனோரின் அலுவலகம் நியாயமாக செயற்படலை உறுதிப்படுத்தல் போன்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தொடர்பாக அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .