2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

உக்ரேனியத் தலைநகரின் புறநகர்களை எட்டிய மோதல்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனியத் தலைநகர் கிவ்வில் ஏவுகணைகள் மழை போல பொழிந்துள்ளன. புகலிடங்களில் குடும்பங்கள் அடைக்கலம் தேடியுள்ள நிலையில், கிவ்வைக் காப்பாற்றுவதற்கான பெற்றோல் குண்டுகளைத் தயார் செய்யுமாறு மக்களுக்கு அதிகாரிகள் நேற்றுக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரேனிய இராணுவத்தை அதிகாரத்தைக் கைப்பற்றுமாறும், அமைதியை ஏற்படுத்துமாறும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

கிவ்வுக்கு வடமேற்காகவுள்ள ஹொஸ்டொமெல் வான்தளத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிவ்வுக்குத் தாக்குதல் நடாத்துவதற்கான தளமாக இது காணப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .