J.A. George / 2021 ஜனவரி 11 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையை 52 வயது ஆண் கைதி, ராஜகிரிய பகுதியை 61 வயது ஆண், மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 36 வயது பெண், கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 51 வயது ஆண், பண்டாரகம பகுதியை சேர்ந்த 70 வயது பெண், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் மற்றும் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago