2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுபான்மை மக்களை அடக்காதீர்

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை மக்களை அடக்குவதற்காகவே ராஜபக்சக்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்துச் சேகரிப்பில் தனது ஒப்பந்தத்தை வைத்தது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டுக்கு எதிராக - மக்களுக்கு எதிராக பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ராஜபக்சக்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்களை அடக்குவதற்கே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது – பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

தற்போதைய ஆட்சிக்காலத்தில் அரசை விமர்சிப்போரை பழிவாங்கும் வகையிலும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கின்றோம். 

குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைச் சிறையிலிடுவதற்கும் தற்போது ராஜபக்சக்களுக்கு இந்தச் சட்டம் துணைபோகின்றது. எனவே, இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அல்லது தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு அது முழுவதுமாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும்" - என்றார். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .