2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டயகம சிறுமி விவகாரம்: 7 பேரிடம் 10 மணிநேரம் விசாரணை

Editorial   / 2021 ஜூலை 22 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில், குடும்பத்தினர் உள்ளிட்ட ஏழு பேரிடம் 10 மணி​நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறுமியின் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஏழு பேரிடமே இவ்வாறு விசாரணைகள் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு தெற்குப் பிரிவின் குற்றவியல் பிரிவு பொலிஸ் குழு, சிறுமியின் வசிப்பிடமான டயகம பிரதேசத்துக்குச் சென்று, இந்த வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஏழுபேரில், வீட்டு வேலைக்காக சிறுமியை அழைத்து வந்த தரகரும் உள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டயகம சிறுமியின் விவகாரம் தொடர்பில், இதற்கு முன்னரும் சிறுமியின் தாய் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுமி,பாலியல் துன்புறுத்தலுக்கு அடிக்கடி உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தொடர்பில், மரண விசாரணைகளையில் தெரியவந்ததை அடுத்தே, இவ்வாறு மீண்டும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .