2025 மே 12, திங்கட்கிழமை

தப்பியோடிய நோயாளியால் அச்சுறுத்தல் இல்லை

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரிடமிருந்து சமூகத்துக்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் இல்லையென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் நடைப் பயணமாக சென்றுள்ளார் என தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டி மூலமே வந்துள்ளார் என்பதோடு, உடனடியாக அவரை அடையாளம் கண்டுகொண்ட புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்கள் அவருக்கு அருகில் செல்லாதவாறு தனிமைப்படுத்தி வைத்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவரை வைத்தியசாலைக்கு அ​ழைத்து வந்த ஓட்டோ சாரதியையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X