Freelancer / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு கோரி, பிரதம நீதியரசருக்கு சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை அனுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட, சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்ப்பளிக்கவே தீர்ப்பாயம் அமைக்குமாறு பிரதம நீதியரசரை சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்ப்பட்டுள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , புனித செபஸ்டியன் தேவாலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்கரிலா கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ட்ரொபிக்கல் இன் (தெஹிவளை) ஆகிய எட்டு தாக்குதல்கள் தொடர்பாகவே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
5 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
28 minute ago