Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 17 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் எட்டுப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.
“இன்று (17) காலை நிலவரத்தின் பிரகாரம், அந்த வைத்தியசாலையின் பணிக்குழு உறுப்பினர்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது” என புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.
அந்த வைத்தியசாலையில் இதுவரையிலும் நான்கு விடுதிகள் (வாட்டு) மூடப்பட்டுள்ளன.
அந்த நான்கு வாட்டுகளும் அவசர சிகிச்சைப்பிரிவும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன.
அவசர பிரிவு, அவசர விபத்து விடுதிகள் இரண்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான இரண்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகளில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை கடந்தவாரம் இனங்காணப்பட்டது.
அதனையடுத்து வைத்திய பணிக்குழுவினருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே, 31 பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியானது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago