2024 மே 04, சனிக்கிழமை

நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு அமுலாகும்

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

போதிய மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இதேவேளை, தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு தென் மாகாணத்தில் மாத்திரம் நாளை (21) அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு இன்று மாலை அறிவித்திருந்த நிலைலேயே மேற்குறிப்பிட்ட அறிவித்தல் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .