Editorial / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
9ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.
196 நாடளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 20 ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் மற்றும் 34 சுயேச்சை குழுக்களிலிருந்து 7,452 பேர், தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய, 1,63, 885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், இன்று மாலை 4 மணியிலிருந்து 5 மணிவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வாக்களிக்க முடியும் என்பதுடன், இவர்களுக்கான விசேட வாக்களிப்பு கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக, இம்முறை வாக்களிப்பானது, பூரண சுகாதார ஆலோசனைகளின் கீழ் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
48 minute ago