2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘பா.ஜ.கவின் மாபெரும் துரோகம்; மாபாதகச் செயல்’

Editorial   / 2021 மார்ச் 25 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் பதவி விலக வேண்டுமென இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது, தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் செய்த மாபெரும் துரோகம்; மாபாதகச் செயலாகுமென அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெளியறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பாராயின், தமிழர்களின் உணர்வுகளை மதித்து, அவர் பதவி விலக வேண்டும் எனவும் பா.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X