2024 மே 04, சனிக்கிழமை

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Nirosh   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின்போது, கூட்ட நடப்பெண் இல்லை என்பதால், பாராளுமன்றம் இடைநடுவிலேயே இன்று ஒத்திவைக்கப்பட்டது.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இன்றைய (23) விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த உரையாற்றிக்கொண்டிருந்தார், சபையில் கூட்ட நடப்பெண் இல்லை சபைக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த சுரேன் ராகவின் எம்.பியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மாத்திரமே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். விவாதத்தின்போது சபையில் கூட்ட நடப்பெண் இல்லை என ரோஹன பண்டார, சபைக்கு தலைமைத் தாங்கிக்கொண்டிருந்த சுரேன் ராகவன் எம்.பியின் கவனத்துக்கு கொண்டுவந்தது, கூட்ட நடப்பெண்ணை கோரினார்.

இதனை தொடர்ந்து சபைக்கு தலைமைத்தாங்கிய சுரேன் ராகவன் வாக்கழைப்பு மணி அதாவது கோரத்தை ஒலிக்க கட்டளையிட்டார். இதனை தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கோரம் ஒலிக்கப்பட்டது. எனினும் சபைக்கு தலைமைத்தாங்கியரோடு ஆளுங்கட்சியில் 7 பேரும் எதிர்க்கட்சியில் ஒருவருடன் மொத்தமாக 9 பேரே சபையில் இருந்தனர்.

எனவே விவாதத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு தேவையான கூட்ட நடப்பெண் இல்லை என்பதால், விவாதம் நிறைவு பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாகவே நிறுத்தப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அரசமைப்பின் 73ஆவது உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் கூட்டநடப்பெண் சபைக்கு தலைமைத்தாங்கும் உறுப்பினருடன் 20ஆக காணப்பட வேண்டும். எந்நேரத்திலாவது கூட்ட நடப்பெண் இல்லை என சபைக்கு தலைமைத்தாங்கும் உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் பட்சத்தில், ஐந்து நிமிடங்கள் கோரம் ஒலிக்கப்படும். கோரம் ஒலித்தும் சபையில் 20இக்குக் குறைவான எம்.பிகள் இருக்கும் பட்சத்தில் சபைக்கு தலைமைத்தாங்கும் உறுப்பினர் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .