Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 22 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தின்அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நிமல் சிறிபால டி சில்வா - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்.
ஆறுமுகன் தொண்டமான் - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு.
தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு அலுவல்கள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள்.
டக்ளஸ் தேவானந்தா - கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்.
பவித்ராதேவி வன்னிஆராச்சி - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்
பந்துல குணவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
ஜனக பண்டார தென்னகோன் - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.
சமல் ராஜபக்ஷ - மஹாவலி, கமத் தொழில், நீர்பாசனம், கிராமிய அபிவிருத்தி மற்றும் உள்ளக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை.
டளஸ் அழகபெரும - கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ - வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து.
விமல் வீரவன்ச - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவம்.
மஹிந்த அமரவீர - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி.
எஸ்.எம். சந்திரசேன - சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகாரம்.
ரமேஷ் பதிரன - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்.
பிரசன்ன ரணதுங்க - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாட்டு மற்றும் சுற்றுலா, விமான சேவைகள்.
4 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
59 minute ago
3 hours ago