Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி எம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“எமது அரசாங்கம், உங்களுக்ளுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன், உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால், நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தெரியப்படுத்தலாம்.
“வெயில் - பனி என்று பாராமல் உங்களை வருத்தி, நீங்கள் உழைக்கும் பணத்தை, உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு, எமது அரசாங்கம் என்றும் உங்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும்.
“எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை, உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும்; உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு, நாம் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம்” என, புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம், பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago