Kamal / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக பொருளாதார நெருக்கடி யுத்தம் போன்றதென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் நெருக்கடிகள் தொடரும் என்றார்.
புத்தளம் - வனாதவில்லுவ , பொலிஸ் நிலைய நிலைய நிர்வாக கட்டட தொகுதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், வெளிநாட்டு வருவாயை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திலேயே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கபட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
இந்தியா இந்த நடைமுறையை சாதகமாக கையாள ஆரம்பித்துள்ளது. எனவே, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இருக்குமதியை குறைக்க அல்லது இரத்துச் நடவடிக்கை எடுக்குமாறு அறிவிரை வழங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உலக பொருளாதார நெருக்கடி இவ்வருடத்துடன் நிறைவடையபோவதில்லை அடுத்த வருடமும் நீடிக்கும், “யுத்தம் போன்றது” தொடர்ச்சியாக முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
31 minute ago
41 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
54 minute ago
2 hours ago