Freelancer / 2023 ஜூலை 09 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். R



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .