2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மார்ச் 23இல் சர்வகட்சி மாநாடு

Freelancer   / 2022 மார்ச் 09 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் ஶ்ரீலசுதந்சதிசரகட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வகட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.

நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரமே சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .