Editorial / 2021 பெப்ரவரி 26 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் இறுதிக்கிரியைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை, சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதியமைச்சர் அலி சப்ரி, அது தொடர்பான அபிப்பிராயத்தைத் தான் முன்வைக்க முடியாதென்றும் அது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
நீதியமைச்சில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
நீதி அமைச்சராகத் தான் பதவி வகிக்கும் வரை, பௌத்த விகாரைகள், தேவாலயங்கள் சட்டத்தில் கையை வைப்பது தனது எதிர்பார்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வாறான ஒரு விடயத்தைக் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.
முகத்தை மூடும் புர்காவைத் தடைசெய்தல், முஸ்லிம் திருமணச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியன முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர்இ சிங்கள- பௌத்த மக்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு எதிராகச் சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பௌத்த நாகரிகத்தைக் கொண்ட இலங்கை, 2500 வருடம் பழைமையான வரலாற்றைக் கொண்ட நாடு. எனவே, இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவர முடியுமா எனக் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறானதொன்றைக் கொண்டு வருமளவுக்கு தான் முட்டாள் இல்லை என்றும் கூறினார்.
முஸ்லிம் சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனை, அமைச்சரவையில் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க கூடாது; ஆண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்படுவதற்கான சம உரிமையை அளிப்பது உள்ளிட்ட திருத்தங்களும் கொண்டுவரப்படவுள்ளது. இது, ஒவ்வொரு சமூகத்தினரையும் இலக்காகக் கொண்டு தீர்மானிக்காமல், நாட்டின் பாதுகாப்புக் குறித்துச் சிந்தித்தே, இந்தத் திருத்தம் செய்யப்படவுள்ளது என்றார்.
 
 
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago