2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரிஷாட்டின் வீட்டில் ‘வன்புணர்வு கொத்தணி’

Editorial   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகையால், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஐந்து நியமிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முழுமையான கண்காணிப்பிக் கீழ், இந்த பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்ளும்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக கடமையாற்றிய ​யுவதிகள் மற்றும் பெண்கள் 11 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வாறு அழைத்துவரப்படும் யுவதிகளும் சிறுமிகளும், ரிஷாட் பதியூதீனின் மைத்துனரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ​தேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவர், ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .