Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் பெயரிடுமாறு கோரிக்கைவிடுத்து, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தான் இன்று (16) கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதை தொடர்ந்தும் தாமதப்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது நாட்டுக்கும் கட்சிக்கும் இழைக்கப்படும் சேதம் என்பதுடன், ஜனாநாயத்தின் மீதான தாக்குதல் என்றும் சஜித் பிரேமதாச, தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதில் பிரச்சினை இருந்தால், உடனடியாக கட்சியின் செயற்குழு மற்றுட் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டி அவர்களிடம் கேட்டு தீர்மானமொன்றை எடுக்குமாறும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
எந்தவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக தான் தலைமைத்துவத்தை வழங்க தயார் என்றும், ஜனாதிபதி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு தயாராக வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago