2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஹரக்கட்டாவை காப்பாற்ற ஒரு கொரில்லா தாக்குதல்

Editorial   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடகாஸ்கரிலிருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு,  குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த  ஹரக்கட்டா உள்ளிட்ட குழுவினரை மீட்டு செல்வதற்காக தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன என , குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி)  நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

கொழும்புகோட்டை நீதவான் திலினகமகே முன்னிலையில் இது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீண்டநேரம் விசாரணை செய்தபோது  ஹரக்கட்டாவையும் ஏனையவர்களையும்  ​ஒரு கொரில்லா தாக்குதல் நடத்தி  மீட்டு செல்வதற்கான தாக்குதல் திட்டம் குறித்து தெரியவந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதனை ஆராய்ந்த நீதவான் இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்த விசாரணைக்காக ஹரக்கட்டாவும்  அவரது  சகாவும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .