2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

50 அடி பள்ளத்தில்...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ,கு.புஷ்பராஜா

அக்கரப்பத்தனை, ஆகுரோவா பிரதேசத்தில் இன்று(20) காலை, தனியார் பஸ்ஸொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா நோக்கி செல்லும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மேற்படி பஸ்ஸில் பயணிகள் பயணித்திருக்கவில்லை எனவும் பஸ், திருத்தப்பணிகளுக்காக சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு இடமளித்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியும் நடத்துனரும் பாய்ந்து உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .