Editorial / 2017 நவம்பர் 03 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}





எம்.எஸ்.எம்.நூர்தீன்
முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் 10வது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பில், நேற்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அவரது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிராந்திய அமைப்பாளர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சு.ப.தமிழ்ச் செல்வனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றப்பட்டு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
22 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago