Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18ஆவது சிரார்த்த தினம், இன்று அனுஷ்டிகப்பட்டது. இதற்கமைவாக, கொழும்பு பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாகவுள்ள அவரது உருவச்சிலைக்கு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (படங்கள்: விஷான்)
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago