2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நீதி கோரி....

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை தொடர்ந்து இன்று புதன்கிழமை(20) யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், யாழ்.மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கின.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (20) ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டும் என பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.  

இதனையடுத்து, யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாடசாலைகள் என அனைத்தும் மூடப்பட்டன.

பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளில் ஆங்காங்கே டயர்கள் கொளுத்தப்பட்டுள்ளன.  

வர்த்தக சங்கங்கள், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அனைத்து இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X