2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல்

Janu   / 2025 ஜூலை 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் பாராளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அவரது உருவச் சிலையடியில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை அமிர்தலிங்கம் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் மூளாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர்  ச.ஜயந்தன் ,பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி  ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .