Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
J.A. George / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோன தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை விமானப்படையால் உருவாக்கப்பட்ட வெப்ப ஈரப்பதன்மை மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை கருவிகள் தயாரிப்புக்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வசிக்கும் இலங்கையர்களின் நிதி உதவியுடன் குறித்த உபகரணங்களை, இலங்கை விமானப்படைக்கு கையளிக்கும் நிகழ்வு, கொழும்பு விமானப்படை தலைமையகத்தில் நேற்று(21) இடம்பெற்றது.
இந்த உபகாரணங்களை விமானப்படை சுகாதாரப் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர பொறுப்பேற்றார்.
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை பொது பொறியியல் பிரிவு மற்றும் இரத்மலானை விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவு ஆகிய பிரிவுகள் இணைந்து இந்த கருவியினை நிர்மாணிக்கின்றன.
இந்த கருவியானது கொவிட் -19 தொற்றுக்குள்ளான நோயாளிகளின் சுவாச கோளாறு தொடர்பான சிசிக்கைகளுக்கு பெரிதும் உதவுகின்றது. மேலும், இந்த சிகிச்சை கருவிகளின் உற்பத்திகளை அதிகரிக்கவே அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இதன்மூலம் கொவிட் -19 தொற்றுக்குள்ளான நோயாளிகளின் உயிர்களை பாதுகாப்பதில் பெரும்பங்களிப்பை மேற்கொள்ளமுடியும்.
இந்த நிகழ்வில் விமானப்படை மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பணிப்பாளர் மற்றும் விமானப்படை பொதுப்பொறியியல் பிரிவு பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் உட்பட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இந்த நிகழ்வு சுகாதாரப்பிரிவின் வழிகாட்டல் மற்றும் பரிந்துரைகளுக்கு ஏற்ப இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago