R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட த்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு புதன்கிழமை ( 08) அன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா கலந்து சிறப்பித்தார்.
கலை பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் ஆரம்பித்த ஆய்வு மாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் சிறப்புரையை மேற்கொண்டார்.
கலைப்பீடத்தில் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இம்முறை நடைபெற்ற ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்”என்னும் தொனிப்பொருளோடு16 ஆய்வுத் தடங்களில் நடைபெற்றது.
இளங்கலைமாணி பட்டக்கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அறிக்கையாக இம்மாநாடு அமைந்தது.
அவை ஆய்வுச் சுருக்கங்களாக இந்த ஆய்வு மாநாட்டின் ஆய்வடங்கல் மூலமும் வெளியிடப்பட்டன.















நிதர்சன் வினோத்
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago