2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

எழுவைதீவுக்கு அரசாங்க அதிபர் விஜயம்

Editorial   / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  . மருதலிங்கம் பிரதீபன்  தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை(16)அன்று  எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

எழுவைதீவு  ஆரம்ப பாடசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டு அதன் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் எழுவைதீவு பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் நேரடியாக பார்வையிட்டார்.

அத்தோடு அண்மையில் ஏற்பட்ட  "டித்வா" புயலால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில்  சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் கால விஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X